வாழ்க்கை வரலாறு


காமராஜருக்குப் பொருளாதாரப் பின்புலம் இல்லை!
கல்விப் பின்புலம் இல்லை! சமூகப் பின்புலம் இல்லை.
காமராஜ் தனது முயற்சியாலே உயர்ந்தார், தனது தியாகத்தாலே உயர்ந்தார்,
காமராஜ் யாராலும், எதனாலும் உருவாக்கப்படவில்லை,
தானாகவேதான் அவர் உருவானார்.
இவ்வகையில் அவர் ஒரு சுயம்பு!
  பெயர் கு.காமராஜர்
தந்தையார் பெயர் குமாரசாமி நாடார்(தேங்காய் வியாபாரம்)
தாயார் பெயர் சிவகாமி அம்மையார்
பிறந்த இடம் சுலோசன நாடார் தெரு, விருதுபட்டி. (தற்போது விருதுநகர்)
படித்த பள்ளி ஷ்ரிஜத் ஏனாதி நாயனார் வித்யாசாலா(1 ஆண்டு), பிடிஅரிசி பள்ளி(kshatriya vidhyasala)
தெரிந்த மொழிகள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம்
பிடித்த நூல் கம்பராமாயணம்
முதல் போராட்டம் வைக்கம் போராட்டம்
முதல் மேடை எளிங்க நாயக்கன் பட்டி (அழகாபுரி செல்லும் வழியில் செங்குன்றாபுரம் அருகே.)
முதல்முறை சிறைவாசம் உப்பு சத்தியாகிரகத்தில்
குருவாக எண்ணியவர் சத்தியமூர்த்தி ஐயர்
காரிய கமிட்டி உறுப்பினராக 1931
காங்கிரஸ் செயலாளராக 1936
காங்கிரஸ் தலைவராக 1940
ஒருநாள் பதவியான நகரசபை 1942
உதவியாளர் வைரவன்
தாய்மாமா கருப்பையா நாடார்(ஜவுளிக்கடை), காசிநாராயணன்(கேரளா-மரக்கடை)
நண்பர்கள் தங்கப்பன்,ரெங்கன்,பெரிய கருப்பன்,பழனிக்குமார் பிள்ளை,கே.எஸ்.முத்துச்சாமி ஆசாரி,முருக தனுஷ்கோடி,அப்துல் ரகுமான்,ஜார்ஜ் ஜோசப்,சுப்புராய பந்தல் வரதராஜுலு நாயுடு
பாட்டியின் பெயர் பார்வதி அம்மாள்
காமராஜர் முதல் அமைச்சரான ஆண்டு 13-4-1954
தனது பதவிக் காலத்திலிருந்து விலகிய ஆண்டு 2-10-1963
இறந்த நாள் 2-10-1975

நினைவுச் சின்னங்கள்
வ.எண் நினைவாக நினைவலைகள் விபரம் தேதி
1. அரசு வெளியீடு அரசிதழ்(கெஜட்) கருப்பு பார்டர் 1975
அஞ்சல் தலை,அஞ்சல் அட்டை,அஞ்சல் உறை 25பை 15.7.1976
நாணயம் ரூ.5,ரூ.100 2004
2. நினைவு இல்லம் பிறந்து வளர்ந்த வீடு விருதுநகர்  
வாழ்ந்த வீடு சென்னை 15.7.1978
3. நினைவகம் எரியூட்டப்பட்ட இடம் சென்னை(கிண்டி) 1976
அஸ்தி கன்னியாகுமரி 2.10.2000
மணிமண்டபம் விருதுநகர் 2012
காட்சியகம் விருதுநகர் 2016
4. சிலை காமராஜர் வாழ்ந்த காலத்திலேயே சென்னை மாநகராட்சி நிறுவியது.நேரு திறந்து வைத்தார் சென்னை மெளண்ட் ரோட்டில் 09.10.1961
  சென்னை  
  புது டெல்லி  
  நாடாளுமன்ற வளாகம்  
5. புகைப்படம் திறந்து வைத்தல் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி திறந்து வைத்தார். சட்டமன்ற வளாகம் 18.8.1977
6. பெயர் மாற்றம் சென்னை உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் உள்நாட்டு விமான நிலையம்  
மதுரை பல்கலைக் கழகம் மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் 1978
கடற்கரைச் சாலை காமராஜ் சாலை  
7. பெயரிடல் (அ) பெயர்சூட்டுதல் விருதுநகரைத் தலைமையகமாகக் கொண்டது காமராஜ் மாவட்டம்(தற்போது விருதுநகர் மாவட்டம்) 15.7.1984
தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு தமிழ்காமராஜ்  
8. கல்விச் சாலை இலவசப் பள்ளி பர்மா தலைநகர் ரங்கூனில்