மாணவர்கள் கல்வி கற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான, தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர். எனினும், நமது வளர்ச்சி வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று விஞ்ஞான தொழில் நுணுக்க மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்டும்.

                                                                                                                                                                                                                              - பச்சைத் தமிழன் கு.காமராஜ்